SBS Tamil - SBS தமிழ்

SBS Tamil - SBS தமிழ்

Independent news and stories from SBS Audio, connecting you to life in Australia and Tamil-speaking Australians. - தமிழ் பேசும் ஆஸ்திரேலியர்களுடனும், ஆஸ்திரேலிய வாழ்க்கையுடனும் இணைய உங்களுக்கு உதவும் பக்கசார்பற்ற செய்திகள் மற்றும் கதைகள்.
00:00
00:00

Resumen del episodio

விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules) வீட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Airbnb's new House Rules – When and how it's enforced

Episodios

14787-

பாத்திரம் கழுவத் தேவையில்லை - Airbnb-இன் புதிய விதிகள்

விடுமுறை முடிந்து புறப்படும் காலை. விமானத்துக்கு நேரமாகிறது. ஆனால் நீங்களோ பாத்திரங்களைக் கழுவி அடுக்குகிறீர்கள், படுக்கை விரிப்புகளைக் கழற்றுகிறீர்கள், குப்பைப் பையுடன் தெருவுக்கு ஓடுகிறீர்கள். அதுவும், சுத்தம் செய்யும் கட்டணத்தை ஏற்கனவே செலுத்திய பிறகு. Airbnb-இல் தங்கியவர்களுக்கு இது பழக்கமான காட்சி. ஆனால் இது மாறப்போகிறது. இந்த மாதம் 20ஆம் தேதி முதல், Airbnb உலகம் முழுவதும் புதிய (House Rules) வீட்டு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துகிறது. இது குறித்த செய்தியின் பின்னணியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Airbnb's new House Rules – When and how it's enforced

11 nov. 2026
14786-

அரசு முன்மொழிந்துள்ள இரு சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டம் என அரசால் முன்மொழியப்பட்டுள்ள இரு சட்டங்கள் தொடர்பில் கடும் எதிர்ப்பு.இது தொடர்பில் “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சி ஒன்றை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன். #sbsaudiopodcast Strong opposition to two proposed laws in Sri Lanka

11 nov. 2026
14785-

இன்றைய செய்திகள்: 11 நவம்பர் 2026, புதன்கிழமை

SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 11/11/2026) செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன். #sbsaudiopodcast Today's highlights (11 November 2026 - Wednesday)

11 nov. 2026
14784-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிரந்தரமாக குடியேறுவதற்கான வாய்ப்பு: விண்ணப்பிப்பது எப்படி?

ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிடம், அதாவது PR, பெற வேண்டும் என்ற கனவோடு இருக்கிறீர்களா? உங்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதற்கான அழைப்பு - Registration of Interest, நவம்பர் 6 முதல் குயின்ஸ்லாந்து மாநிலத்தால் ஏற்கப்படுகின்றன. இது குறித்த செய்தியை எடுத்து வருகிறார் குலசேகரம் சஞ்சயன். #sbsaudiopodcast Live regional, head for PR - Queensland's 491 explained

10 nov. 2026
14783-

பாதுகாப்பு விசா நிராகரிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கட்டாயக் கட்டணம்!

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோர், அவர்களது பாதுகாப்பு விசா நிராகரிக்கப்பட்டால் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு முன்கூட்டியே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதிமுறைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம். #sbsaudiopodcast Asylum seekers face $1,863 upfront fee to challenge visa refusals

10 nov. 2026